Editorial / 2018 ஜூன் 18 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - சாலையை அண்மித்த கரியல் வயல்வெளிப் பகுதியில், விடுதலைப்புலிகள் தங்கள் பயிற்சி நடவடிக்கைக்கெனப் பயன்படுத்திய பாரிய கட்டடம் ஒன்று, தற்போதும் காணப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் தங்கள் கனரக ஆயுத பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட குறித்த இடத்தில் மாடி கட்டடம் ஒன்றைக் கட்டியுள்ளார்கள். அந்தக் கட்டடமே, தற்போதும் அழிவடையாத நிலையில் காணப்படுகின்றது.
கடந்த 2015ஆம் ஆண்டு, குறித்த பகுதி, படையிரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது, காணி உரிமையாளர்கள் காணிகளை துப்புரவு செய்து விவசாய நடவடிக்கையை மேற்கொண்டபோதே, பற்றைக்காட்டுக்குள் இந்த மாடி வீட்டைக் கண்டுள்ளதாக, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025