2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சிதறு தேங்காய் உடைப்பு

Editorial   / 2019 ஜூன் 21 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டும் என கோரி நடத்தப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தரமுயர்த்த வேண்டுமெனவும் கோரி வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகள் இடம்பெற்றது.

வவுனியா இந்து கோவில்களின் ஒன்றியமும் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம், காலை 7.30 மணிக்கு இடம்பெற்றது.

கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர்  கோவில் முன்றலில் 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டன.

இதன்போது, மடுக்கந்த மூவட்டகம ஆனந்த தேரோ, முன்னாள்  வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகதாரலிங்கம், ராஜா குகனேஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .