Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற நிலையில் ஏற்பட்ட தகராறில் வீட்டு உரிமையாளரின் மனைவியைத் தாக்கியதோடு சொத்துகளுக்கும் சேதம் விளைவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் சாரதி உள்ளிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மூவருக்கு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், இன்று (22) தலா 1 இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
நேற்று (21) பிற்பகல், உருத்திரபுரம் பகுதியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டவர்கள்,அப்பகுதியில் உள்ள வீடொன்றின் வாயிற்கதவில் வேட்பாளர் சிறிதரனின் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.
இதற்கு, வீட்டு உரிமையாளர் எதிர்ப்புத் தெரிவித்து, ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்துள்ளார். இதன் போது, தேர்தல் பரப்புரையில் வந்தவர்கள் வீட்டுரிமையாளரையும் மனைவிளையும் தாக்கியுள்ளதோடு, சொத்துகளுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் சாரதி உள்ளிட்டமூவரும் கைது செய்யப்பட்டு, இன்று, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago