2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘சி.வியின் கட்சிக்கு வன்னியில் இடமில்லை’

Editorial   / 2020 ஜூலை 12 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா பொருளாதார மத்திய நிலைத்துக்கே முடிவெடுக்க முடியாத விக்னேஸ்வரனின் கட்சிக்கு, வன்னியில் இடம் கிடைக்கபதென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர் சி. சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியா – கற்குழியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட தமிழ் மக்களுக்கு செய்தது துரோகமே எனவும் தம்மை உடைப்பதற்கு ஆரம்பப் புள்ளியாக அவரைப் பயன்படுத்த முற்பட்டுள்ளனரெனவும் கூறினார்.

ஆனால், வன்னி நிலப்பரப்பில் அவருக்கான எந்த இடமும் இல்லையெனத் தெரிவித்த சிவமோகன், அவர் சார்ந்த கட்சிக்கு எந்தவிதமான பரிவும் இந்த மக்களிடம் இல்லையெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .