Princiya Dixci / 2021 மார்ச் 10 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில், சுருட்டு பற்றவைத்த வயோதிபர் ஒருவர், தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.
சங்கரப்பிள்ளை வேதாரணியம் (வயது 79) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
கடந்த 6ஆம் திகதியன்று குறித்த வயோதிபர் சுருட்டை பற்ற வைத்த போது, தவறுதலாக அவரது சாரத்தில் தீப்பற்றியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி, நேற்று (09) அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த வயோதிபர், சில காலங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
4 minute ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 Nov 2025
15 Nov 2025