2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சுவிஸ் போதகரின் ஆராதனைக்குச் சென்ற இருவர் வவுனியா வைத்தியசாலையில்

க. அகரன்   / 2020 மார்ச் 22 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுவிற்ஸர்லாந்து மதபோகரின் வழிப்பாட்டில் வவுனியாவில் இருந்து கலந்துகொண்டவர்களில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் போதனையில் ஈடுபட்ட மதபோதகருக்கு COVID-19 தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் இருந்து குறித்த நிகழ்வுக்குச் சென்ற எட்டு பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
 
இவர்களில் நெளுக்குளத்தை சேர்ந்த ஒருவரும் புளியங்குளத்தை சேர்ந்த ஒருவருமாக  இருவருக்கு உடலில் உபாதைக்குணம் இருப்பதை அறிந்து பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள சிரமம் பாராது அவர்களை உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .