Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு – செம்மலை பகுதியில், வீதியில் மணல்காற்று வீசுவதால் வீதியால் செல்வதில் மக்கள் பாரிய இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
தற்போது, வீசிவரும் கடும் காற்றினால் நாயாற்று கடல் வெளிவற்றியுள்ள நிலையில் அதில் இருந்தான மணல்காற்றில் வீசப்படுவதால், செம்மலை வீதியில் மக்கள் செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
செம்மலை மகாவித்தியால உயர்தர பரீட்சை நிலைய்தில் பரீட்சை எழுதும் மாணவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக, பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குமுழமுனை, அளம்பில், உடுப்புக்குளம், கொக்குத்தொடுவாய் பிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் உயர்தர பரீட்சையை செம்மலை மகா வித்தியாலய பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதிவருகின்றார்கள். இவர்கள் பரீட்சை நிலையத்திற்கு செல்லும்போதும் வரும்போதும் மணல் காற்றால் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளார்கள்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .