2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

செம்மலை நீராவியடி கோவில் பகுதியில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரைக்கு முன்பாக, தென்னில ங்ககையிலிருந்து வருகைதந்த பெரும்பான்மையின மக்கள், சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

கொழும்பு, அநுராதபுரம், வெலிஓயா பகுதியிலிருந்து, மூன்று பஸ்களிலிருந்து அழைத்துவரப்பட்ட பெரும்பான்மையின மக்கள், இன்று (16) சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர் . அதேவேளை, வெலிஓயா பிரதேசத்தில் இருந்து இரண்டு பஸ்களில் அழைத்து அனைவருமாக இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் ஐக்கும் மேற்பட்ட தேரர்கள், குருகந்த ரஜமஹா விகாரை விகாராதிபதி கொலம்ப மேதாலங்க தேரர் மற்றும் 300க்கும் மேற்பட்ட பெரும்பான்மையின மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.  

இந்த சர்சைக்குரிய கோவில் பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவடட நீதிமன்றம், மே மாதம் 6ஆம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, அனுமதியற்ற முறையில் நடப்படட விகாரை பெயர்ப்பலகை மற்றும் பிள்ளையார் கோவில் பெயர்ப்பலகை ஆகியன வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றப்பட்டது. இந்நிலையில், விகாரை பெயர்ப்பலகை அகற்றப்படடமை உள்ளிடட விடயங்கள் எதிர்ப்பு தெரிவித்தே, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .