2025 மே 17, சனிக்கிழமை

செயலமர்வு இடைநிறுத்தம்

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்  

கொரோனா தொற்று காரணமாக, கிளிநொச்சி கல்வி வலயத்தின் அதிபர்கள், கல்வித் திணைக்களத்தின்  உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான செயலமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்ற சாதாரண கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம் (GEM) தொடர்பில், கிளிநொச்சி மத்திய கல்லூரியில், நேற்று (15)அதிபர்கள், வலயக் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான தெளிவுப்படுத்தல் செயலமர்வொன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  குறித்த செயலமர்வை,  கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக இடைநிறுத்துவதென்று, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கி. கமலராஜன் அறிவித்ததையடுத்து, செயலமர்வு  நிறுத்தப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .