2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

செருக்கன் பகுதியில் சட்டவிரோதமாக உப்பளம் நிர்மாணம்

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி – உருத்திரபுரம், செருக்கன் பகுதியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஒத்துழைப்புடன், தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்றால் சட்டவிரோதமான முறையில் உப்பளம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு நிர்மாணிக்கப்படும் குறித்த உப்பளத்தால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்படும் அதேவேளை, செருக்கன், பெரியபரந்தன், சாலம்பன், பொறிக்கடவை, உருத்திரபுரம், சிவநகர் உள்ளிட்ட பல கிராமங்களின் நீர் உவர் நீராகும் அபாயமுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், சுமார் 3,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமெனவும், அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், குறித்த நிறுவனத்தின் தலைவர்களுடன் இங்கு வருகை தந்து, கூட்டம் ஒன்றை நடத்தி, அந்தக் கூட்டத்தில் 35 பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்து, இந்த உப்பளம் நிர்மானப்பணிகளை முன்னெடுத்ததாகவும், மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்களின் முறைப்பாட்டை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அந்த கிராம மக்கள் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதனும் கலந்து கொண்டார்

இதையடுத்து, இது தொடர்பில், அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் செய்த முறைப்பாட்டையடுத்து, நேற்று  (14) ஸ்தலத்துக்கு விரைந்த சிறிதரன் எம.பி, நிலைமைகளை ஆராய்நத்மை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .