சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 மார்ச் 06 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஒன்பது வருடங்களாக போக்குவரத்துப் பிரச்சனையால் அல்லற்பட்ட தமக்கு ஜனாதிபதியின் நல்லெண்ணத்தால் தீர்வு கிடைத்திருப்பதாக முல்லைத்தீவு அம்பாள்புரம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு அம்பாள்புரம் கிராமத்தில் இருந்து 85 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் காலையில் 12 கிலோமீற்றரும் மாலையில் 12 கிலோமீற்றரும் கால்நடையாகச்சென்று கல்வி கற்று வந்தனர்.
இந்தப்பகுதிக்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித்தருமாறு மேற்படி கிராமமக்களும் பொது அமைப்புக்களும் மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் ஆகியோருக்கு கடந்த ஒன்பது வருடங்களாக கோரிக்கைகளை முன்வைத்து கடிதங்களை அனுப்பியிருந்தனர். ஆனால், அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து, ஊடகங்களில் புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வெளியாகியிருந்தன.
இதற்கமைய ஜனாதிபதி, இவ்வீதியூடாக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த பணிப்புரை விடுத்திருந்தார். கடந்த 21ஆம் திகதி முதல் இவ்வீதியூடாக போக்குவரத்துச் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனால் தமது பிள்ளைகள் பாதுகாப்பாக பாடசாலைகளுக்குச்சென்று வரக்கூடிய சூழலை உருவாக்கிய ஜனாதிபதிக்கும், அது தொடர்பில் செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கும் இப்பிரதேச மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago