2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு மனு கையளிப்பு

George   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (18) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி கரடிபோக்குசந்தியில் ஒன்றிணைந்த 200 மேற்;பட்ட, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி போராட்டத்தில்  ஈடுபட்டதுடன் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய ஜனாதிபதிக்கான மனுவினை கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்தில் கையளித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினை கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவில் அமைக்குமாறும் அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோர் செயலகத்தில் முடிவெடுக்கும் நிலையிலான சர்வதேச பங்காளிகளின் பங்;குபற்றல்  அவசியம் என்றும், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் மெய்ப்பித்துகாட்டுகின்ற அதிகாரம் இக்குழுவிற்கு இருக்கவேண்டும் என்றும் இக்குழுவானது பாதிக்கப்பட்டவர்களின் விருப்ப கருத்துக்களுக்கு அமைய உருவாக்கப்படுவதுடன் தமிழ் புத்திஜீவிகளும் சட்டத்தரணிகளும் இக்குழுவில் நியமிக்கப்படவேண்டும் என்றும் அம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இக்குழுவின் முடிவுகள் குற்றவியல் பொறுப்பை ஏற்படுத்த கூடியவையாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திரமாகவும் அச்சுறுத்தல் இன்றியும்;  செயற்படக் கூடிய அலுவலகமாக காணாமல் ஆக்கப்பட்டோர் செயலகம் அமைக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி முல்லைத்தீவில் இச்செயலகம் அமைந்தாலே இக்குழுமீது நாம் ஒரளவு நம்பிக்கை கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயங்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஊடாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியோடு பேசி இவ்விடயங்களை நிறைவேற்றுமாறு கோரிய மகஜர் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தலைவி திருமதி யோ.கனகறஞ்சினியினால் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் கையளிப்பதற்காக கட்சியின் கொள்கை பரப்புசெயலாளர் அ.வேழமாலிகிதனிடம் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .