2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

டெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

டெலோவின் மத்தியக் குழு கூட்டம், கட்சியின் வவுனியா அலுவலகத்தில், இன்று (18) கட்சியின் தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, டெலோவின் அடுத்த கட்ட நகர்வு, சமகால அரசியல் நிலைவரங்கள், வரவிருக்கும் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், கட்சியின் செயலாளர் சிறீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதராதலிங்கம், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், கோவிந்தன் கருணாகரன், கிழக்கு மாகாண சபை‌யின் முன்னாள் உறுப்பினர் பிரசன்னா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .