Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் இருந்து மாணவர்கள் அடிக்கடி வீட்டுகுத் துரத்தி விடுவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனகபுரம் 2ஆம் குறுக்கு வீதியில் குறித்த தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகின்றது. இதன் இயக்குனரே கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். குறித்த தனியார் கல்வி நிறுவனத்தில் இணைக்கப்படுகின்ற மாணவர்கள் பெற்றோர்களிடம் குறித்த ஆசிரியர் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளாது, மாணவர்களை வீட்டுக்குத் துரத்தி விடுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் குறித்த கல்வி நிறுவனம் தொடர்பாக நடவடிக்கை மாவட்டச் செயலாளர் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கல்வி நிறுவனத்தினை நடாத்துகின்ற ஆசிரியர் கிளிநொச்சி நகரில் உள்ள அரச அலுவலகம் ஒன்றிலேயே பணியாற்றி வருவதாகவும் கடந்த புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறுவதற்கு பத்து நாட்கள் இருப்பதற்கு முன்னர் கூட முட்டாள் மாணவர்கள் என மாணவர்களை வீடு அனுப்பியதாகவும் வசதி படைத்தவர்களின் பிள்ளைகளை மட்டும் வகுப்பில் வைத்திருந்ததாகவும் பெற்றோர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கல்வி நிறுவனம் தொடர்பாகவும் அதன் ஆசிரியர் தொடர்பாகவும் மாவட்டச் செயலகம் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் போது பாதிக்கப்பட்ட பெற்றோர் நேரடியாக மாவட்டச் செயலாளரிடம் முறைப்பாடுகள் செய்வதற்கும் தயாராக உள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கிளிநொச்சி நகரத்தில் இயங்குகின்ற தனியார் கல்வி நிலையங்களில் இடம்பெறுகின்ற குறைபாடுகளைத் தீர்ப்பதற்கான ஒழுங்குகள் இல்லாததன் காரணமாக, மாவட்டச் செயலாளரிடமே பெற்றோர்கள் முறைப்பாடுகள் தெரிவிக்கின்றனர்.
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago