2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கன், எஸ்.என்.நிபோஜன்

தமிழரசுக் கட்சி  மத்திய செயற்குழு கூட்டம், சற்றுமுன்னர், கிளிநொச்சியில்  ஆரம்பமானது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கிளிநொச்சி தமிழரசுக்கட்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில்,  காலை 10.45 மணிக்கு ஆரம்பமானது.

இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீநேசன், சரவணபவன், சிறிதரன், சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ண சிங்கம், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

எனினும், தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், யோகேஸ்வரன் ஆகியோர்   இதுவரை கலந்துகொள்ளவில்லை.

இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளமையால் இக்கூட்டத்தில் வேட்பாளர்கள் தொடர்பிலும் மற்றும்  முக்கியமான சில  முடிவுகளும்  எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .