Editorial / 2018 ஜனவரி 28 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (28) வவுனியாவில் வெளியிடப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு கொள்கைப்பிரகடனங்களை உள்ளடக்கிய 15 பக்கங்களை கொண்ட விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
இவ் விஞ்ஞாபனம் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனால் கட்சித்தலைவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, த.சித்தார்த்தன், டெலோ அமைப்பின் செயலாளர் க.சிறிகாந்தா, உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago