2025 மே 22, வியாழக்கிழமை

தரமற்ற வீதி அபிவிருத்திப் பணிகள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்     

கிளிநொச்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பல வீதி அபிவிருத்திப் பணிகள் மிகவும் தரமற்ற வகையில்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பில் சில பிரதேசங்களில் பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்களும் கண்டுகொள்ளவில்லை எனவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கம்பெரலியத் திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்ற 220 மீற்றர்கள் வீதிகள் பெரும்பாலானவை BOQ  குறிப்பிடப்பட்டமைக்கு அமைவாக புனரமைப்புச் செய்யப்படவில்லை என்றும் ஒப்பந்தகாரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கையூட்டை வழங்கி விட்டு தாங்கள் விரும்பியவாறு வீதி புனரமைப்பை மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில், கிளிநொச்சி - அம்பாள்குளம் பாடசாலை பின் வீதி 220 மீற்றர் அண்மையில் கொங்றீட் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டது. வீதியின் இருபுறமும் கிரவல் கொண்டு பக்க அணைப்புச் செய்ய வேண்டும் . ஆனால் ஒப்பந்தகாரர் வீதியில் உள்ள ஊத்தை மண்ணை அரைகுறையாக இருபுறமும் அணைப்புச் செய்துவிட்டு வீதி அபிவிருத்தியை நிறைவு செய்துள்ளனர். இது சாதரண ஒரு மழைக்கும் கறைந்து சென்றுவிடும்.  அதன் பின்னர் குறித்த வீதி போக்குவரத்துக்கு ஆபத்தானதாக காணப்படும் எனவும் பொது மக்கள்  தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள், கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .