2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தரம் 1இல் மாணவர்கள் இணைவு; துணுக்காயில் 600 வரையே உள்ளது

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தரம் ஒன்றில் 600 வரையான மாணவர்களே இணைந்து வருகின்றனரென, வலயக் கல்வித் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில், 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது 15 ஆயிரம் வரையான குடும்பங்களே வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள 61 வரையான பாடசாலைகளில், தரம் 1க்கு மாணவர்கள் இணையும் வீதம் குறைவாகவே காணப்படுகின்றது.

அதாவது இவ்வாண்டில், 618 மாணவர்களும் 2016ஆம் ஆண்டில், 687 மாணவர்களும் 2017ஆம் ஆண்டில், 638 மாணவர்களும் 2018ஆம் ஆண்டில், 614 மாணவர்களும் 2019ஆம் ஆண்டில், 629 மாணவர்களும் தரம் 01இல் இணைந்துள்ளதாக, வலயக் கல்வித் திணைக்களத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .