2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

தலைமன்னாரில் இருந்து கோட்டை வரை புதிய ரயில்

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமன்னார் துறைமுகத்திற்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் தலைமன்னார் துறைமுக நிலையத்தில் இருந்து அதிகாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு 10.34 மணிக்கு கோட்டை நிலையத்தை அடைந்து மாலை 3.35 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு இரவு 10.48 மணிக்கு தலைமன்னார் துறைமுகத்தை வந்தடையும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயிலில் முதல் வகுப்பில் குளிரூட்டப்பட்ட இரண்டு பெட்டிகள், இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை பெட்டிகள் இரண்டு மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு சாதாரண பெட்டிகள் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .