2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தாராபுரம் கிராமம் ஒரு வாரத்துக்கு முடக்கப்பட்டது

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் - தாராபுரம் கிராமம், இன்று (08) அதிகாலை முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு வாரத்துக்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மார்ச் 18ஆம் திகதியன்று, தாராபுரம் கிராமத்தில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு புத்தளத்துக்குச் சென்ற ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர், தனக்கு நோய் ஏற்பட்டிருந்தும், வைத்தியசாலைக்குச் செல்லவில்லை என்றும் அவர், மார்ச் 15ஆம் திகதியன்று, இந்தோனேஷியாவிலிருந்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே, அவர் வந்துசென்ற தாராபுரம் கிராமம் முடக்கப்பட்டு, அங்குள்ள மக்கள், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .