Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாந்தை திருக்கேதீஸ்வர வீதியில், கேதீஸ்வரம் சிவத் தொண்டர்களால் தற்காலிக அலங்கார வளைவானது, இன்று காலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம், சிவராத்திரி தினத்தன்று உடைக்கப்பட்ட குறித்த அலங்கார வளைவு தொடர்பாக மன்னார் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.
இதேவேளை, திருக்கேதீச்சர நிர்வாகம் கடந்த 6ஆம் திகதி இந்த வருடம் சிவராத்திரி விழாவை சிறப்பாக அனுஷ்டிப்பதற்காக ஏற்கெனவே வளைவு இருந்த இடத்தில் தற்காலிக வளைவு அமைப்பதற்கு நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக அனுமதி கோரி இருந்தனர்.
அதற்கமைவாக, மன்னார் மேல் நிதிமன்றத்தால் இன்றில் (19) இருந்து எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை வரையான 5 நாள்களுக்கு வளைவு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக, இன்றைய தினம் காலை குறித்த தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago