Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
திருமலையில், வௌ்ளிக்கிழமை (11) இரவு கைதான கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞனின் வீட்டிலிருந்து, நேற்று (12) வெடிபொருள்களும் கருவிகளும் மீட்கப்பட்டுள்ளன.
முன்னால் போராளியான குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கிளிநொச்சி - அம்பாள்குளத்தில் அமைந்துள்ள இளைஞனின் வீட்டை கிளிநொச்சி பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே, இந்த வெடிபொருள்களும் கருவிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது டி56 ரக துப்பாக்கி - 1, சிறிய ரக துப்பாக்கிகள் - 3, கைக்குண்டுகள் - 5, டி57 துப்பாக்கி ரவைகள் - 154, சிறிய ரக துப்பாக்கி ரவைகள் - 45, மடிக் கணினி - 1, அலைபேசிகள் - 4, எம் கே.எம் ஜி ரவைகள் -6, வெடிப்பு கருவிக்கான வயர்கள், வெடிப்பு கருவிகள் - 4, ஜிபிஎஸ் - 1, தானியக்கிகள், கமெரா உள்ளிட்ட பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .