2025 மே 15, வியாழக்கிழமை

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கிளிநொச்சியிலும் தடை

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ, தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தக்கூடதென, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (16), கிளிநொச்சி அமைந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகமான அறிவகத்துக்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம், நீதிமன்றக் கட்டளையை வழங்கியுள்ளார்.

15.9.2020 தொடக்கம் 28.09.2020 வரையான நாள்களில் அஞ்சலி நிகழ்வையோ அல்லது ஊர்வலங்கள், கூட்டங்களையோ நடத்தக் கூடாதென, கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .