Niroshini / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூக்கு கயிற்றுடன் அத்தியாவசிய பொருள்களை சுமந்துவாறு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா, கரைச்சி பிரதேச சபை அமர்வுக்கு வருகை தந்தார்.
கரைச்சி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, இன்று (21) நடைபெற்றது.
இதன் போது, பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா, விலை அதிகரித்து மக்களுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ள சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து கொண்டு, கழுத்தில் தூக்கு கயிற்றை அணிந்துவாறு சபை அமர்வில் கலந்துகொண்டு, தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
மக்களை பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளதாக, அரசாங்கத்தை சபையில் வைத்து, கடுமையாக அவர் விமர்சித்தார்.
இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜாவின் போராட்டம் நியாயமானது என்று, பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



12 minute ago
34 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
34 minute ago
40 minute ago
1 hours ago