Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
தென்பகுதி மக்களையும் திருப்திப்படுத்திக் கொண்டுதான், உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக, பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
அத்துடன், மக்களுக்குச் சேவை செய்வதில் நல்லாட்சி அரசாங்கம் எந்தவகையிலும் பின்னிற்காதெனவும் அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு, மாவட்டச் செயலக மண்டபத்தில், இன்று (13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், வழங்கப்படும் இந்த நிதி மிகவும் குறைந்ததாக இருக்கலாமெனவும் காலப்போக்கில், அரசியல் ரீதியாக சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்து இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், மக்களுக்குச் சேவை செய்வதில் நல்லாட்சி அரசாங்கம் எந்த வகையிலும் பின்னிற்காதெனத் தெரிவித்த அவர், அதிலும் ஜனாதிபதியும் பிரதமரும் சிறுபான்மை சமூகத்துக்குச் சேவை செய்வதில் எந்தவகையிலும் பின்னிற்பதில்லையெனவும் கூறினார்.
அபிவிருத்தியுடனான உரிமைகளைத்தான் தாங்கள் பெறவேண்டுமெனக் குறிப்பிட்டதுடன், இதனடிப்படையில் அரசாங்கமும் இவ்விடயத்தில் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆகவே, தென்பகுதியில் உள்ள பிரச்சினைகளையும் தென்பகுதி மக்களையும் திருப்திப்படுத்திக் கொண்டுதான், உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், அபிவிருத்திகளை உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென, அவர் மேலும் கூறினார்.
41 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago