Princiya Dixci / 2021 மார்ச் 29 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
பாவனையில் உள்ள தேங்காய் எண்ணெய்களின் மாதிரிகளை பெற்றுக்கொள்ளும் செயற்றிட்டம், மன்னாரில் உள்ள வர்த்தக நிலையங்களில், இன்று (29) காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
மத்திய பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்புரைக்கு அமைவாக, மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஏற்பாட்டில், இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கலப்படம் மற்றும் அங்கிகரிக்கப்படாத எண்ணெய் தொடர்பாக ஆரயப்பட்டதுடன், சந்தேகத்துக்குரிய எண்ணெய்களின் மாதிரிகளும் பெறப்பட்டன.
மேற்படி பெறப்பட்ட மாதிரிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, கொழும்பில் உள்ள தேசிய பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
அத்துடன், தேசிய பகுப்பாய்வுத் திணைக்களத்தினூடாக மாதிரிகளில் கலப்படம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், விற்பனையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025