Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 20 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தமிழீழ விடுதலை இயக்கம் இரண்டாகவில்லையென, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில், நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “தமிழீழ விடுதலை இயக்கத்துக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டு, இரு தரப்பாகப் பிரிந்திருக்கும் நிலையில், சமரசம் செய்யப்பட்டு ஒற்றுமையாக மீள இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?” என, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தங்களைப் பொறுத்தவரையில், தமிழீழ விடுதலை இயக்கம் இரு தரப்பாக உடைந்துவிட்டதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தங்களது கட்சியைப் பொறுத்தவரை யார் தவறு செய்தாலும் தவறு தவறுதானெனவும் தெரிவித்தார்.
கட்சியை மீறி நடந்தவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கியிருப்பதாகத் தெரிவித்த அவர், அதேபோல கட்சியின் கட்டுப்பாட்டை மீறியவர்களுக்கு எதிராகவும் கட்சி யாப்பின் அடிப்படையில் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போமெனவும் கூறினார்.
தமிழீழ விடுதலை இயக்கம், என்றைக்கும் ஒன்றாகத்தான் இருக்குமெனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .