2025 மே 20, செவ்வாய்க்கிழமை

’நம்பிக்கைக் கொடுப்பவருக்கே ஆதரவு’

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

“சிங்கள மக்களே இணைந்து வாருங்கள்; எங்கள் நாட்டில் இருக்கின்ற ஒரு தேசிய இனைத்தையும் அரவணைத்துச் செல்லுவோம்“ என்ற நம்பிக்கையை கொடுக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர் துணிந்து வெளிவரட்டும், அவருக்கு ஆதரவளிப்பது பற்றி தாங்கள் சிந்திக்கத் தயாராக இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி – விவேகானந்தா நகரில், இன்று (01) நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தமது கட்சியின் தலைவர் அறிவித்தது போன்று, ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்த வேட்பாளர் தீர்க்கமான முடிவை வைக்கின்றாரோ, எவர் ஆனித்தரமான கருத்தை முன்வைக்கின்றாரோ அவர் தொடர்பில் தாங்கள் சரியான முடிவை எடுப்போமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X