Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிலுள்ள அனைத்து இன மக்களுக்கு இடையேயும் அமைதியையும் நல்லிணத்தையும் ஏற்படுத்தக்கூடிய வேட்பாளருகே, தங்களது ஆதரவு வழங்கப்படும் என, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா, பட்டானிச்சூர் பிரதேசத்தில், நேற்று (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பயங்கரவாதிகளுக்கு தான் எதிரானவன் என்று கூறிய அவர், முப்படையினரால், இந்நாட்டுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட அமைதியைப் பாதுகாக்க வேண்டியது, அனைவரது கடமை என்றும் அவர் கூறினார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக, சிறுபான்மைக் கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர், முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .