Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட உணவகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற உணவு கையாளும் இடங்களில் பொலித்தீன் பாவனைகளை முற்றாகத் தடை செய்து, அவற்றுக்கு மாற்றீடாக வாழையிலை பயன்பாட்டை கொண்டு வர வேண்டுமென்று முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் 18ஆவது அமர்வு, சபா மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்றது. இதன்போது, நல்லூர் பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சி.கௌசல்யா முன்வைத்த பிரேரணையே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதேவேளை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட உணவகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற உணவு கையாளும் இடங்களில் பொலித்தீன் பாவனைகளை முற்றாக தடை செய்து அவற்றுக்கு மாற்றீடாக வாழையிலை பயன்பாட்டை கொண்டு வர வேண்டும்.
இப்பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய உறுப்பினர் சி.கௌசல்யா, தற்போதே அதற்கான அறிவுறுத்தல்களை வழங்குவதன் ஊடாக, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு சபையால் குறித்த இடங்களுக்கு அனுமதி பத்திரங்கள் வழங்கும் போது, பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தி அனுமதி பத்திரங்களை வழங்க வேண்டுமெனவும் கூறினார்.
பொலித்தீன் பாவனைக்கு மாற்றீடாக வாழை இலை பயன்பாடு வருமாக இருப்பின், அதன் ஊடாக வாழை பயிர்ச்செய்கை செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அதிகரிக்க முடியுமெனவும், அவர் கூறினார்.
இதேவேளை, நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில், உப்பு பொதியிடும் தொழிற்சாலையொன்றை நிறுவி அங்கு பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago