Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்.
நாளை (05) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பணி உதவியாளர் நியமனத்தில், பாரிய குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக, பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த நியமனங்கள் வழங்கப்படவேண்டும் எனப் பலரும் பலகாலமாக முயற்சி செய்தார்களோ அந்த நீண்டகாலச் சுகாதாரத் தொண்டர்கள் நடுத்தெருவில் விடப்பட்டு, அரசியல் பின்புலமும் செல்வாக்கும் உடைய ஓரிரு வருடங்களே சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட கணிசமான தொகையினர் தற்போது சுகாதாரப் பணி உதவியாளர்களாக உள்வாங்கப்படவுள்ளனர்.
இதனால் நீண்டகால அனுபவம் கொண்டுள்ள பலர் வாய்ப்பினைத் தவறவிடடுள்ளதோடு, அவர்களில் அனேகர் 40 வயதை எட்டியுள்ளதனால் இனிவரும் காலங்களில் அரச வேலைவாய்ப்பினைப் பெறும் சந்தர்ப்பங்கள் நிரந்தரமாகவே மறுக்கப்படும் ஆபத்துக்கு ஆளாகியுள்ளனர் எனவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
47 minute ago
50 minute ago