Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இரு குளங்களான கரியாலைநாகபடுவான் குளம், குடமுருட்டிக் குளம் என்பனவற்றில் கடந்த பத்தாண்டுகளில் நிறைவான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என, இக்குளங்களின் கீழான விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கரியாலைநாகபடுவான் குளத்துக்கான நீர் வரவை அதிகரிக்க வேண்டும். ஏனெனில் இக்குளத்துக்கு நீர் வரவுக் குறைவாகக் காணப்படுகின்றது. மழை காலங்களில் குளத்துக்கு நீர் வராமல் வேறு திசைகளில் நீர் சென்றடைவதாகவும் இதற்கான வேலைத் திட்டங்களை கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும்.
இதேபோன்று குடமுருட்டிக் குளத்திலும் வேலைத் திட்டங்கள் இடம்பெறவில்லை. குளத்தின் அணைக்கட்டு பல இடங்களில் துவாரங்கள் ஏற்படும் போதெல்லாம் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் மண் மூடைகள் அடுக்கப்பட்டு அணைக்கட்டுப் பாதுகாக்கப்படும்.
இந்நிலையில் இரு குளங்களிலும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் பெரிய நீர்ப்பாசனக் குளங்களில் அடங்குகின்ற இக்குளங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் மாவட்டத்தின் விவசாய முயற்சிகளை முன்னெடுக்க முடியும்.
வன்னேரிக்குளம், தேவன்குளம், கரியாலைநாகபடுவான்குளம் என்பவற்றை இணைத்து வேலைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதேபோன்று குடமுருட்டிக் குளத்தின் அணைக்கட்டைப் புனரமைத்து நீர்ப்பாசன வாய்க்கால்களைப் புனரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
45 minute ago
2 hours ago