2025 மே 21, புதன்கிழமை

நீரின்றி அழியும் நிலையில் சிறுபோக பயிர்ச்செய்கை

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-மு.தமிழ்ச்செல்வன்     

கிளிநொச்சி - இரணைமடுகுளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கையானது,  சில பிரதேசங்களில் நீரின்றி அழிவடையும் நிலையில் காணப்படுவதாக, பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், பெரியபரந்தன் எல்.பி 1 பகுதியில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்கள்,  நீர் போதாமையால் அழிவடையும் நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், அதிகாரிகளின்  கவனத்துக்குக் கொண்டு சென்ற போது, அவர்கள் அழிவடையும் தருவாயில் உள்ள  வயல்களுக்கு மீண்டும் இரணைமடுவில் இருந்து நீர் திறந்துவிடப்படுமென அறிவிக்கப்பட்டு, நீர் திறந்து விடப்பட்டபோதும், தங்களது வயல்களுக்கு நீர் கிடைக்கப்பெறவில்லையென, விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் திறந்து விடப்பட்ட நீர்,  அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் தேங்கி நிற்பதாகவும், விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 9 அடிக்கு குறைவாக இருப்பதால், கிளிநொச்சிக்கான குடிநீரை வழங்குவதிலும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .