2025 மே 22, வியாழக்கிழமை

நீர்ப்பாசனப் பொறியியலாளருக்கு கூட்டத்தில் பாராட்டு

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - வவுனிக்குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, நீர்ப்பாசன விநியோகத்தை சிறப்பாக முன்னெடுத்தமைக்காக, வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் கை.பிரகாஸ்க்கு வவுனிக்குளம் விவசாயிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

நேற்று  (05) நடைபெற்ற மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே, விவசாயப் பிரதிநிதிகளால் இவ்வாறு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த விவசாய பிரதிநிதிகள், வவுனிக்குளம் சிறுபோக நெற்செய்கை தற்போது வெற்றிகரமாக அறுவடை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அழிவுகள் ஏற்படக் கூடிய சூழலில், திட்டமிட்ட நீர்ப்பாசன முயற்சிகளை முன்னெடுத்த பொறியியலாளருக்கு பாராட்டுகளைத் தெரிவிப்பதாகவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .