Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 29 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
நெல் சந்தைப்படுத்தும் சபையினரால், இன்று (29) முதல் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருவதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்த விலையில் தனியார் வியாபாரிகளால் நெல் கொள்வனவு செய்யப்படுவதாக மாவட்டச் செயலகத்துக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவெனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், நெல் சந்தைப்படுத்தும் சபையினரைக் கொண்ட நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவெனவும், ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கமைய, புளியம்பொக்கணை, இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி, அக்கராயன், முழங்காவில், பூநகரி ஆகிய பகுதிகளில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையின் கொள்வனவு நிலையங்களால், இன்று (29) முதல், நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருவதாகவும் இதற்கான பைகள் வழங்கப்படடுள்ளனவெனவும், அவர் கூறினார்.
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
51 minute ago