Editorial / 2022 ஜூன் 13 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன் லெம்பட்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் நேற்று (13) திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை அடுத்து, வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் நொச்சிக்குளம் பகுதியில் இரு சகோதரர்கள் வாள்வெட்டு தாக்குதலில் பலியாகிய நிலையில் நள்ளிரவில் நொச்சிகுளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கத்திகுத்துக்கு இலக்காகியுள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 minute ago
28 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
59 minute ago
1 hours ago