2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

பாடசாலையில் கைவரிசையை காட்டிய திருடர்கள்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பாடசாலை உடைக்கப்பட்டு அங்கிருந்த பல பொருட்கள் களவாடப்பட்டுள்ளன என பாடசாலையின் அதிபரால்  பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் அலுவலகத்தின் கூரையை பிரித்து, அலுவலகத்திற்குள் இறங்கிய திருடர்கள்  அங்கிருந்த 6 மடிக்கணினிகள், மின்விசிறி ஒன்று, புகைப்பட கருவி ஒன்று, மேசை  கணினி ஒன்று உள்ளிட பல பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாடசாலை அதிபர், வலயக் கல்வித் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதோடு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். 

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .