Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரயில் பணியாளர்கள் மூவருக்கும், கொரோனா வைரஸ் தொற்று நோய் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மன்னார் பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னாரில் இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரெனவும் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வவுனியா - பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பி வந்த நபருக்கு, திங்கட்கிழமையன்று (14) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், அவருக்கு தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதெனவும் கூறினார்.
அத்துடன், அவரைப் பிடிப்பதற்கு உதவிய மூன்று பணியாளர்களுக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்களை, அவர்களது வீடுகளுக்கு அனுப்பி விட்டு, ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க முடியுமா என்பது தொடர்பாக தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும், அவர் கூறினார்.
மேலும், “இன்று (16) அதிகாலை, சட்டவிரோதமாகமான முறையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக வந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
“இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், மன்னார் - பள்ளிமுனைப் பகுதியில் உள்ள அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் ஒரு வாரத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்போம்” எனவும் வினோதன் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago