Freelancer / 2022 ஜூலை 13 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கர்
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டத்துக்கு புறம்பான விதத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போது மீட்கப்பட்ட டீசல் மற்றும் எரிபொருள் எதுவும் மாவட்டத்தின் விவசாய தேவை மற்றும் அறுவடை என்பவற்றுக்கு வழங்கப்படாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கையில் குறிப்பிட்ட சில இடங்களில் அறுவடை செய்யக்கூடிய நிலையில் காணப்படுகின்ற போதும், அவற்றை அறுவடை செய்வதற்கு எரிபொருள் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு நீதிமன்றத்தினால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு விடுவிக்கப்பட்டிருக்கின்ற டீசல் மற்றும் மண்ணெண்ணை பெற்றோல் என்பன அத்தியாவசிய சேவைகள் என்ற அடிப்படையில் வழங்கப்படும் நிலையில், விவசாயிகள் டீசலை 1,000 - 1,500 ரூபாய்க்கு பெற்று தங்களுடைய வயலை அறுவடை செய்ய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். (R)
29 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago