Princiya Dixci / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பப்பாளிச் செய்கை, நோய்த்தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பப்பாளிச் செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியான மழை காரணமாகவும் பப்பாளிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வருட இறுதியில் பெய்த கடும் மழை காரணமாக, பப்பாளிகளில் ஒரு விதமான நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், அறுவடைக்குத் தயாராக இருந்த பப்பாளிகள் அழுகி விழுகின்றன எனவும் பப்பாளிச் செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நோய்த் தாக்கம் காரணமாக, நல்ல நிலையிலே உள்ள பப்பாளிப் பழங்களையும் மிகக் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
4 minute ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 Nov 2025
15 Nov 2025