2025 மே 21, புதன்கிழமை

பல்வேறு தேவைகளின்றி அவதியுறும் அம்பாள்புரம் மக்கள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேசத்துகுட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில், அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை, தொழில் வாய்ப்புக்கள் இன்மை காரணமாக, இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படும் மாந்தை கிழக்கின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஓர்  கிராமமாகக் காணப்படும் அம்பாள்புரம் கிராமத்தில், தற்போது 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த கிராமத்தில் நிலவும் வரட்சியால் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், வாழ்வாதாரத் தொழில்களும பாதிக்கப்பட்டுள்ளன.

வவுனிக்குளத்தை நம்பிய நன்னீர் மீன்பிடியும் விவசாயமும் இந்த மக்களின் வாழ்வாதாரமாக அமைந்துள்ள போதும், தற்போதைய வரட்சி இவ்விரு தொழில்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் இங்குள்ள மக்கள் ஒரு நேர உணவுக்கே கஷ்டப்படுகின்ற நிலமை காணப்படுகின்றது.

தற்போது நுண்கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை மீளச்செலுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதுடன், பெருமளவானோர் வெளிமாவட்டங்களுக்கு வேலை தேடிச்சென்றுள்ளனர். இவ்வாறு, பல்வேறு நெருக்கடிகளை தாம் எதிர்கொள்வதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .