Freelancer / 2022 மார்ச் 02 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
இலங்கையில் ரவிராஜ் கொலை வழக்கை இந்த அரசாங்கம் கையாளவில்லை எனவும் நீதியை வழங்கவில்லை எனவும் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பயங்கரவாத தடைச் சட்டத்தை பழிவாங்குவதற்கான சட்டமாக அரசாங்கம் பயன்படுத்துகிறது என தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்களை ஒழிப்பதற்காக அவர்கள் மீது ஏவப்பட்ட மிகக் கொடூரமான ஒரு சட்டமாகவே அமைந்திருக்கிறது. அதனால் தான் நாங்கள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை இந்த மண்ணிலே இழந்திருக்கின்றோம். பல ஆயிரக்கணக்கான மக்களை இழந்திருக்கின்றோம்.
எமது மண்ணில் மாவீரர்களை நினைவு கூர முடியாதவர்களாக, எமது உறவுகளை நினைக்க முடியாதவர்களாக, எங்களுக்காக போராடிய சங்கிலிய மன்னன், பண்டாரவன்னியன், அக்கராயன் மன்னன் ஆகியோரை நினைக்க முடியாதவர்தவர்களாக பயங்கரவாத தடைச் சட்டம் எங்கள் மீது பாய்கிறது.
யுத்தத்துக்கு பிற்பாடும் பல நூற்றுக்கணக்கனக்கான இளைஞர்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
ஒரு உலகம் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், மனித சாசனங்களையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்ற இந்த காலக கட்டத்தில் அந்த உரிமைகளையும், சாசனங்களையும் மீறி இலங்கையினுடைய இந்த கொடூரமான சட்டம் எங்கள் மீதுது தொடர்ந்து பாய்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த சட்டத்தை நீக்குமாறு மேற்கொள்ளப்படும் போராட்டம் தொடர்ச்சியாக இன்னும் பல வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டு இந்த சட்டம் நீக்கப்படும் வரை எங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
அதேபோல் இலங்கையில் ரவிராஜ் கொலை வழக்கை இந்த அரசாங்கம் கையாளவில்லை. நீதியை வழங்கவில்லை. கிருசாந்தியினுடைய கொலை வழக்கு நீதி என்னும் சரியாக கிடைக்கவில்லை.
திருகோணமலையில் விருலக்சன் என்ற மாணவன் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு தற்போது தான் விடுவிக்கப்பட்டான்.
இவையெல்லாம் எமது கண்முன்னே நடைபெறுகின்ற சம்பவங்கள். அரசாங்கத்திற்கு வேண்டியவர்கள், அரசாங்கத்தில் இருப்பவர்கள் ஆகியோர் யாரையும் பழிவாங்க வேண்டும் என்றால் அதற்காக அவர்கள் பயன்படுத்துகின்ற சட்டமாக, அரசாங்கம் பழிவாங்குவதற்கான ஒரு சட்டமாக இதனை வைத்திருகிறது. எனவே இதனை நீக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
10 minute ago
25 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
25 minute ago
32 minute ago