Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - ஆனைவிழுந்தான்குளம் கிராமம் ஊடாக வன்னேரிக்குளம் மகா வித்தியாலயம் வரை பஸ் சேவைகளை அதிகரிக்குமாறு, கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரு கிராமங்களிலும் ஆயிரம் வரையான குடும்பங்கள் வாழ்கின்றபோதிலும் கிராமங்களுக்கு ஊடாக பஸ் சேவைகள் நடைபெறாததன் காரணமாக, நீண்ட தூரம் நடந்து சென்றே பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
ஆனைவிழுந்தான்குளம் அ.த.க.பாடசாலை, வன்னேரிக்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் ஆசிரியர்களின் போக்குவரத்து நெருக்கடியினை கருத்திற்கொண்டு இரு பாடசாலைகளின் மாணவர்களும் போக்குவரத்து செய்யக் கூடியவகையில் பஸ்ஸினை பணியில் ஈடுபடுத்துமாறு பொது மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஆனைவிழுந்தான் கிராமத்திற்கு மாவட்டச் செயலாளர் வருகை தந்தபோது ஆனைவிழுந்தான் கிராமத்துக்கு பஸ் சேவையினை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் குறித்த பஸ் சேவை இதுவரை நடைபெறவில்லை என ஆனைவிழுந்தான் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
50 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
01 May 2026