2025 மே 23, வெள்ளிக்கிழமை

’பாடசாலைக்கான பொதீக வளம் இல்லை’

நடராசா கிருஸ்ணகுமார்   / 2019 ஜூன் 26 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மட்டத்தில் மாணவர்கள் சாதனைகள் நிலைநாட்டுகின்ற போதிலும் பாடசாலைக்கான பௌதீக வளங்கள் கிடைப்பதில்லை என முல்லைத்தீவு கோட்டைக்கட்டியகுளம் மகா வித்தியாலய அதிபர் திருமதி அ. கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.

நேற்று பாடசாலையில் இடம் பெற்ற கோட்டைத்தடம் 02 நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது. 

துணுக்காய் கல்வி வலயத்தில் போக்குவரத்து வசதிகள் அற்ற கிராமத்தில் எமது பாடசாலை இயங்குகின்றது. எமது பாடசாலையில் ஆசிரியர்களுக்கான விடுதிகள் இல்லை. மாணவர்களுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது. எமது பாடசாலையில் நிலவுகின்ற பல்வேறு பௌதீக வளப் பற்றாக்குறைகள் காரணமாக ஆசிரியர்கள் கற்பிப்பதற்கு வருவதற்கே தயக்கம் காட்டுகின்றனர். 

ஆனால் எமது நிகழ்வுகளுக்கு வரும் விருந்தினர்களிடம் எமது நெருக்கடிகள் தொடர்பாக தெரிவிக்கின்றபோது உதவுகின்றோம் என்று சொல்லிச் சென்றவர்கள் கூட இதுவரை உதவிகள் செய்யவில்லை. எமது பாடசாலை தேசிய மட்டத்தில் கூட வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் சாதனைகளை நிலைநாட்டியுள்ளது. 

எமது பாடசாலை கல்வியிலும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும் வளர்ந்து செல்வதற்கு பௌதீக வள மேம்பாடு அவசியம். அதற்கு எல்லோரும் உதவ வேண்டும். எமது உயர்தர மாணவர் ஒன்றியத்தின் கோட்டைத்தடம் 02 நூல் கூட எமது பாடசாலையின் சாதனையாகவே கருத வேண்டும் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X