Princiya Dixci / 2022 ஜூலை 19 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ஆரம்ப பாடசாலை வளாகத்துக்குள் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது.
பாடசாலையின் வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விசாரா உத்தியோகத்தர் ஒருவரின் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
நேற்று (18) பிற்பகல் இடம்பெற்ற இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன், சிசிடிவி காணொளியில் காணப்பட்டுள்ளார்.
கல்விசாரா உத்தியோகத்தர் அலுவலகத்துக்குள் வேலையில் இருந்தபோது பாடாசாலை வளாகத்துக்குள் நுழைந்த இளைஞன், சைக்கிளைத் திருடி சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகள் முழுமையாக கிடைக்கப் பெற்றுள்ளன.
இது தொடர்பாக வவுனியா பொலிஸில் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து, பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியாவில் அண்மைக்காலமாக இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
05 Nov 2025