Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 04:54 - 1 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
“மன்னாரில் ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வோர் அரசியல் பாதையில் பயணிக்கும் பொழுது தமிழர்களுடைய தமிழ் தேசியம் சிதையுமே ஒழிய வேறு இலாபம் எதுவும் இல்லை. இவை எமது வாக்குகளை சிதைக்கும் செயலே” என, சட்டத்தரணி டினேஷன் தெரிவித்தார்.
அண்மையில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக ஊடக சந்திப்பின் மூலம் தெரியப்படுத்தியிருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களினுடைய நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது.
“இந்த வகையில் கடந்த வருடம் மன்னார் திருகேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் மத்தியில் மத ரீதியான பிளவுகளை சிலர் தூண்டிவருகின்றனர். அதன் மூலம் அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம் என சில மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் எண்ணுகின்றனர்.
“இந்த வளைவு உடைக்கப்பட்டதை கொண்டு, தற்போது மன்னாரில் இரு மதத்தினரும் இருவேறு அரசியல் பாதைகளில் சென்று கொண்டு இருக்கின்றனர். தற்போது இந்து குருமார் பேரவை தாங்கள் சுயேட்சையாக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
“மறு பக்கம் கிறிஸ்தவ அமைப்புகள் தாங்கள் தங்களுடைய குழுக்களை அமைத்து, சில கூட்டங்களை நடத்தி தாங்களும் சுயமாக அல்லது கூட்டணி அமைத்தோ அல்லது அரசாங்கத்துடன் இணைந்தோ கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.
“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜென பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுமாயின், எமது பேரம் பேசுகின்ற சக்தி பெரும்பான்மை இல்லாமல் போய்விடும்.
“இவ்வாறு நாம் பிரிந்து நின்றோம். ஆனால் எமது பகுதியில் வேறு இனத்தவரோ, வேறு மதத்தவர் ஒருவரோ, பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரோ நாடாளுமன்ற உறுப்பினராக வர வாய்ப்புள்ளது.
“எனவே, எமது மக்கள் மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிளவுபட்டு காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில், எமது உரிமைகளையோ தீர்வுகளையோ பெற்றுகொள்ள முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.
Ma.Sithivinayagam (journalist) Sunday, 23 February 2020 05:39 AM
உண்மையில் தமிழ்த் தேசியம் என்கிற சொல்லாட்சி மிக நுட்பமானது . இனத்தால் மொழியால் இறையாண்மைமிக்க தமிழ்தேச நிலப்பரப்பால் வரையறை செய்யப்படுவதே தமிழ்தேசியம் எனும் கருத்தினைத் தாண்டி மதம் மரபினம் என்பனவே தேசியத்தின் இன்றைய தூண்களாகிப் போன துர்ப்பாக்கியதுள் வாழ்கின்றோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
6 hours ago
6 hours ago