2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாலங்களும் மதகுகளும் புதிதாகும்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2020 ஜனவரி 20 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட, மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த, தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் பாலங்கள், மதகுகளை புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதன் முதல் கட்டமாக, முல்லையடி வண்ணாங்கேணி இணைப்பு வீதி பாலம் புனரமைக்கப்படவுள்ளது. இதற்கான பூர்வாங்கப்ப ணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த பணிகளை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் சுரேன், உப தவிசாளர் கயன், உறுப்பினர்களான ரமேஷ் வீரவாகுதேவர், கோகுல்ராஜ் ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .