2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’பிரச்சினைகளை எம்.பிகள் கண்டுகொள்வதில்லை’

Editorial   / 2019 ஜூன் 15 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை, மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்வதில்லை என, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் திருஞானதீபம் அன்ரனி தெரிவித்தார்.

இது தொடர்பில், தொடர்ந்துரைத்த அவர், நேற்றைய தினம் (14) யாழ்ப்பாணத்தில் வடமாகாணத்தின் கடற்றொழிலாளர்களின் பிரதநிதிகள் ஒன்றுகூடி இருந்ததாகவும் மாவட்டங்களில் இருந்து தலா இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாவது கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்து இருந்ததாகவும் கூறினார்.

ஆனால், கூட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட வருகை தரவில்லையெனக் குற்றஞ்சாட்டிய அவர், முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டவிரோத கடற்றொழில்கள் நடைபெறுவதாகவும் கூறினார்.

முல்லைத்தீவு, அளம்பில், கொக்குளாய் ஆகிய பகுதிகளில் கரைவலைத் தொழில் நடைபெறுகின்றது. இதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களமும் துணைபோகின்றது.

இதன் காரணமாக, உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. கரைவலைத் தொழில் கரையில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால், 10 கிலோமீற்றருக்கு அதிகமான தூரம் கடலில் இருந்து உழவு இயந்திரங்களின் துணையுடன் கரைவலை இழுக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கின்ற போதும், அவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .