2025 மே 05, திங்கட்கிழமை

புதுக்குடியிருப்பில் பூரண கடையடைப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 2000 நாட்களை கடக்கின்றன.

இந்த நிலையில்  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதியான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாரிய அளவிலான மக்கள் போராட்டம் ஒன்றினை நடத்த உள்ளதாகவும் அதற்கு அனைத்துதரப்பினரையும் ஆதரவு வழங்குமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியிருந்தனர்.

அதற்கமைய  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்  30.08.2022 இன்று புதுக்குடியிருப்பு நகரில் இடம்பெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் பூரண ஆதரவு வழங்குவதாகவும் அனைவரும் ஆதரவு வழங்குமாறும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்

புதுக்குடியிருப்பு நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலயங்களையும் காலை முதல் நண்பகல் 12 மணிவரை மூடி போராட்டத்துக்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாகவும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் நவநீதன் தெரிவித்திருந்தார்

அதற்கமைய  இன்று காலை முதல் புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் உள்ள வணிக நிலையங்களை மூடி வர்த்தகர்கள் பூரண ஆதரவு வழங்கிவருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X