2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புதுக்குடியிருப்பில் மதில் விழுந்ததில் இளைஞன் மரணம்

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில், தனியார் பால் கொள்வனவு நிலையம் ஒன்றில் கொள்வனவாளராகப் பணிபுரிந்த இளைஞனொருவர் மீது, மதில் உடைந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

புளியங்குளம் - ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சௌந்தராயன் சயந்தன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஊரடங்கு வேளையிலும், பண்ணையாளர்களிடம் இருந்து பால் கொள்வனவுக்காக, குறித்த கொள்வனவு நிலையத்திலேயே தங்கியிருந்து பணிபுரிந்துள்ள மேற்படி  இளைஞன், நேற்று (08) இரவு மதிலைப் பிடித்து பக்கத்துக் காணிக்குள் பாய முற்பட்ட போது, அவர் மீது குறித்த மதில் உடைந்து விழுந்துள்ளது.

இதனால் காயமடைந்த இளைஞன், காயமடைந்த நிலையில் காப்பாற்ற யாரும் இல்லாத நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்றுக் காலை, குறித்த பால் கொள்வனவு நிலையத்துக்குப் பாலைக் கொண்டு சென்ற பண்ணையாளர்கள், குறித்த இளைஞனைக் காணாத நிலையில் தேடியபோது, மதில் உடைந்து விழுந்திருந்த சிதைவுக்குள் சிக்குண்டு உயிரிழந்திருப்பதை அவதானித்து, புதுக்குடியிருப்பு பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளின் பின்னர் சடலத்தை மீட்டு, மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையின் பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸாசார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .